முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

துணிவு உள்ள இடத்தில் நேர்மை நிலவும் 

  துணிவுள்ள இடத்திலே நேர்மை நிளவும்...  - ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார். அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார். பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் ஜெயிப்பவன் தளபதியாவான். அது மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப் பரிசுப் பொருளாக வழங்கப்படும்.  இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும் வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித் தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால் நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை சமையல்காரன் திடீரென்று நுழைந்தான். அவனிடம் ரகசியமான குரலில், "தம்பி... நாளை நடக்கும் போட்டியில் நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய். எனவே போட்டியே இல்லாமல் நீதான் ஜெயிப்பாய்" என்றான். அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.  சமையல்காரன் மீண்டும் சொன்னான். "இதோ பார். நான் பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில் தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன். அவனால் காலையில் எழுந்திருக்
சமீபத்திய இடுகைகள்

வாழ்க்கை அழகாக மாறும் !!”

  அனைத்து சிக்கலுக்கும் ஒரே வைத்தியம்..  - அப்பாவிடம் எல்லாவற்றிற்குமே ஒரே வைத்தியம் தான் இருக்கும். உங்களுக்கு எவ்வளவு பெரிய வியாதியாக இருந்தாலும் அவர் இதைத்தான் சொல்வார். இதை மட்டும்தான் சொல்வார்."தலகாணி இல்லாம வெறும்தரைல படு, சரியாகிடும்"உலகின் அத்தனை வலிகளுக்கும் சர்வலோக நிவாரணி இந்த ஒன்றைத்தவிர வேறேதும் இல்லையென்பது அவரின் ஆணித்தரமான நம்பிக்கை. இதன் விசித்திரம் என்னவெனில் உடம்பிற்கு மட்டுமல்ல, மனதிற்குமான வைத்தியமாகவும் அவர் இதைத்தான் பரிந்துரைப்பார்.மனைவியை இழந்த எதிர்வீட்டு முதியவரின் புலம்பலுக்கு "வெறும் தரைல படுங்க, பாரம் குறையும்" என்று ஜஸ்ட் லைக் தட் அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது தான் இதை கவனிக்க ஆரம்பித்ததாக ஞாபகம்.பின்னொரு நாளில், கடன் தொல்லையென விரக்தியாய் புலம்பிய உறவினனுக்கு, வேலைப்பளுவென எரிந்து விழுந்த நண்பனுக்கு என பட்டியல் சன்னமாய் நீளும்.பின் எப்போதாவது "தலகாணி வேண்டாம் இந்துமா, கொஞ்ச நேரம் இப்டி படுத்துக்குறேன், அம்மாகிட்ட டீ போட சொல்லு" என்றபடி படுத்துக்கொள்வார். ஏதோ புரிந்ததுபோல் இருக்கும்."முதுகுவலி, தலைவலிக்குப் பரவாயில்ல, மன

கற்றுக்கொண்ட பாடம் 👨‍🎓

  பத்து வயது மகளிடம் கற்றுக்கொண்ட பாடம் !!  - ‘‘அம்மா..! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே ?’’‘‘சரிப்பா...! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள்.‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு.  அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார்.பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார்.‘‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!’’பத்து வயதுப் பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள். ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார்.  பேத்தி துள்ளிக் குதித்தாள். அப்பா அனைவரையும் புறப்படச

எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் 🐪🙅‍♂️

 எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்..!!  - "ஓடிக்கொண்டே இருக்கிறேன்… பல பிரச்சனைகள்.  வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள். தூங்கமுடியவில்லை..! எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே  முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.அப்போது மாலை நேரம். முனிவர் அவனிடம்  "தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார். சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்."நல்லது.. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்."சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .." என்றான்."என்ன ஆச்சு?" என்றார் முனிவர்.."சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன. சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால், அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவைக்க முடியவில்லை

அறிவின் வெளிச்சத்தால், அதைக் தேடிக் கண்டுபிடித்து விட்டேன்”

  எங்கே நிம்மதி...?   - ஒரு மனிதன், எந்தக் குறையும் இல்லை அவனுக்கு. ஆனாலும், மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை, சிரமப்பட்டான். அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள். “பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு… அங்கே ஒரு பெரியவர் இருக்கார்… போய்ப் பாருங்கள்!”ஆசிரமத்துக்குப் போனான்…பெரியவரைப் பார்த்தான். “ஐயா… மனசுலே நிம்மதி இல்லே… படுத்தா தூங்க முடியலே!”அவர் நிமிர்ந்து பார்த்தார், “தம்பி… உன் நிலைமை எனக்குப் புரியுது… இப்படி வந்து உட்கார்!”பிறகு அவர் சொன்னார்:“உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது…  தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!”“அது எப்படிங்க?”“சொல்றேன்…அது மட்டுமல்ல… மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!”“ஐயா… நீங்க சொல்றது எனக்கு புரியலே!’“புரியவைக்கிறேன்… அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு.”வயிறு நிறையச் சாப்பிட்டான்...பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, “இதில் படுத்துக்கொள்” என்றார்.படுத்துக் கொண்டான்…பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்…கதை இதுதான்:ரயில் புறப்படப் போகிறது, அவசர

மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.

 அற்புத உலகத்துக்கான வழி ?  - அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது. எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.  அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.ஆனால், போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. ‘காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன’, அவரிடம் குருவி வழி கேட்டது.“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க, அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.  பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நா

.யார் காரணம் ?💣💌

  யார் காரணம் ?  - காலை உணவை குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மகள் தேனீர்க் கோப்பையைத் தவறுதலாகத் தட்டிவிட, அதிலிருந்த தேனீர் நீங்கள் அலுவலகம் செல்ல அணிந்திருந்த உடையை அசிங்கப்படுத்திவிடுகிறது.இந்தச் சம்பவத்தின் மீது உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால், அடுத்து நடக்கப் போவது என்ன என்பதனைத் தீர்மானிப்பது, நீங்கள் எவ்வாறு பதில் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பதில்தான் தங்கியுள்ளது.நீங்கள் திட்டுகிறீர்கள். தேனீர் கோப்பையைத் தட்டிவிட்டதற்காக உங்கள் மகளைக் கடுமையாகத் திட்டித் தீர்க்கிறீர்கள்.  மகள் அழத் தொடங்குவாள். அடுத்ததாக, தேனீர்க் கோப்பையை மேசையின் ஓரத்தில் வைத்ததற்காக உங்கள் மனைவி மீது பழியைப் போடுகிறீர்கள். அதனைத் தொடர்ந்து ஒரு சிறிய வாய் யுத்தம்.கோபத்தோடு மாடிக்குச் சென்று வேறு உடையை அணிந்து வருகிறீர்கள். அங்கே நீங்கள் உங்கள் மகள் அழுது கொண்டே காலையுணவை முடித்து, பாடசாலை செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருப்பதைக் காண்கிறீர்கள். சற்று முன் நடந்த நிகழ்வினால் உங்கள் மகள் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறாள். உங்கள் மனைவியும் உடனடியாக அலுவலகத்திற்குப் போக வேண்டும்.

.யார் வெற்றிபெறுகிறார்கள் ? எப்படி ?🫲

  யார் ஜெயிக்கிறார்கள் ? எப்படி ?  - அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.  அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். அந்தக் காட்டில், பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே, தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.  நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும், வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது. இருவரையும் நேரடியாக மோதவிட்டால், பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி.தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே, வேறோரு திட்டத்தை முடிவு செய்தார். மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழ

இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள்.

  "மினிமலிஸம் "... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை !  - எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார். வீட்ல மூணு பசங்க, மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல.. . இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட்  என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்; மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர் தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும். 2009

பணத்தின் மதிப்பு 

  ஒரு 500 ரூபாயின் மதிப்பு...  - 200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார், ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி “யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லிஅந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார்.  பிறகு அதை சரி செய்து“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய் தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம்.நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்ம

நேர்மைக்கு   என்றுமே   அழிவில்லை”

  நேர்மைக்கு   என்றுமே   அழிவில்லை  - பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன்.  ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர் தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.“இறைவா… என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன். நீ தான் அவர்களை காக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தவர் பிள்ளைகளிடம் “நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும். நீங்களும் எந்த சூழலிலும் நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து என் பெயரைக் காப்பாற்றவேண்டும்…” என்று  சொன்னார். இரண்டு மகன்களும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்க, கடைசி மகள் ப்ரியா மட்டும் கோபத்தில் வெடித்தாள். ப்ரியா கல்லூரி முதலாமாண்டு படித்துவருகிறாள். அவள் விரும்பிய கல்லூரியில் கூட அவளை சேர்க்க வழியின்றி ஏதோ அரசு உதவி பெறும் கல்லூரியில் தான் பத்மநாபனால் சேர்க்க முடிந்தது. அத