யார் காரணம் ? - காலை உணவை குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மகள் தேனீர்க் கோப்பையைத் தவறுதலாகத் தட்டிவிட, அதிலிருந்த தேனீர் நீங்கள் அலுவலகம் செல்ல அணிந்திருந்த உடையை அசிங்கப்படுத்திவிடுகிறது.இந்தச் சம்பவத்தின் மீது உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால், அடுத்து நடக்கப் போவது என்ன என்பதனைத் தீர்மானிப்பது, நீங்கள் எவ்வாறு பதில் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பதில்தான் தங்கியுள்ளது.நீங்கள் திட்டுகிறீர்கள். தேனீர் கோப்பையைத் தட்டிவிட்டதற்காக உங்கள் மகளைக் கடுமையாகத் திட்டித் தீர்க்கிறீர்கள்.
மகள் அழத் தொடங்குவாள். அடுத்ததாக, தேனீர்க் கோப்பையை மேசையின் ஓரத்தில் வைத்ததற்காக உங்கள் மனைவி மீது பழியைப் போடுகிறீர்கள். அதனைத் தொடர்ந்து ஒரு சிறிய வாய் யுத்தம்.கோபத்தோடு மாடிக்குச் சென்று வேறு உடையை அணிந்து வருகிறீர்கள். அங்கே நீங்கள் உங்கள் மகள் அழுது கொண்டே காலையுணவை முடித்து, பாடசாலை செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருப்பதைக் காண்கிறீர்கள். சற்று முன் நடந்த நிகழ்வினால் உங்கள் மகள் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறாள். உங்கள் மனைவியும் உடனடியாக அலுவலகத்திற்குப் போக வேண்டும். ஆகவே, அவசர அவசரமாக மகளை காரில் ஏற்றிக் கொண்டு பாடசாலை நோக்கி விரைகிறீர்கள். தாமதித்தினால், 30 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டிய வீதியில் 40 மைல் வேகத்தில் பயணிக்கிறீர்கள். 15 நிமிட தாமதம் மற்றும் வேகமாக வாகனத்தை செலுத்தியதற்காக அபராத தொகையையும் செலுத்திவிட்டு பாடசாலையை அடைகிறீர்கள்.‘போய் வருகிறேன்’ என்று கூடச் சொல்லாமல் உங்கள் மகள் பாடசாலைக்குள் ஓடிவிட்டாள்.20 நிமிட தாமதத்திற்குப் பின் அலுவலகத்திற்கு போய்ச்சேர்கிறீர்கள். அப்போதுதான் உணர்கிறீர்கள் பிரீஃப்கேஸை அவசரத்தில் எடுத்து வர மறந்து விட்டதை. அன்றைய தினத்தின் தொடக்கமே குழப்பமாகிவிட்டது. மேலும் மேலும் அது மேசமடைந்து கொண்டே போகிறது.அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்கிறீர்கள்...வீடு வந்தடைந்தவுடன் உங்களுக்கும் உங்கள் மனைவி, மகளுக்குமிடையேயான உறவில் சற்று விரிசலை உணர்கிறீர்கள்.ஏன்? காரணம், காலையில் நீங்கள் நடந்து கொண்ட விதம்.இந்த நாள் இப்படி குழப்பமாக போனதற்கு காரணம் என்ன?அ) அந்த கோப்பைத் தேனீரா?ஆ) அதற்கு காரணமான உங்கள் மகளா?இ) அபராதம் விதித்த போலீஸ்காரனா?ஈ) நீங்களா?சரியான விடை: “ஈ”அந்தத் தேனீர் சிந்தியதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் தேனீர் சிந்திய அடுத்த ஐந்து வினாடிகளில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான் காரணம்.நீங்கள் இவ்வாறுதான் நடந்து கொண்டிருக்க வேண்டும்:தேனீர் உங்கள் மீது படுகிறது. உங்கள் மகள் அழப் போகிறாள். நீங்கள் அன்பான குரலில், ‘பரவாயில்லை, அடுத்த முறை கவனமாக நடந்து கொள் செல்லமே!’சிந்திய தேனீரை டவலால் துடைத்தபடி மாடிக்கு விரைகிறீர்கள். மாடியிலிருந்து உடையை மாற்றிக் கொண்டு பிரீப்கேஸையும் எடுத்துக் கொண்டு இறங்கி வரும்போது ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள். அங்கே, உங்களை நோக்கிக் கையசைத்து விடை பெற்றவாறே உங்கள் மகள் பாடசாலை பேருந்தில் ஏறுவதைக் காண்கிறீர்கள். 5 நிமிடம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்து அலுவலக நண்பர்களுடன் காலை வணக்கத்தை பரிமாறிக் கொள்கிறீர்கள்.வித்தியாசங்களைப் பார்த்தீர்களா?இரண்டு விதமான நிகழ்ச்சிகள். இரண்டும் ஒரே மாதிரித் தொடங்கின. வெவ்வேறு விதமாக முடிந்தன.ஏன்? ஏனென்றால், நீங்கள் நிகழ்வுகளை எதிர்கொண்ட விதம்.உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் 10% சம்பவங்களில் உங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. 90%ம் எப்படி நீங்கள் நடந்து கொள்கின்றீர்கள் என்பதில்தான் தங்கியுள்ளது.யார் காரணம் ?💣💌
கருத்துகள்
கருத்துரையிடுக