தேனீஒரு பவுண்டு தேன் சேகரிக்க இவை இருபது லட்சம் பூக்களிலிருந்து தேனை சேகரிக்க வேண்டும்.ஆண்டுக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணம் செய்து தன்னுடைய உணவுத் தேவைக்காக பூக்களில் இருந்து அவை தேனை எடுக்கின்றன.ஒரு பவுண்டு தேன் தயாரிக்க ஒரு தேனீ சுமார் 14 லட்சம் கிலோ மீட்டர் பறக்க வேண்டும். அதாவது உலகம் முழுவதும் மூன்று முறை சுற்றுவதற்கு சமம்.ஒரு தேனீ தன் வாழ்நாள் முழுவதும் ஒன்றரை தேக்கரண்டி தேனை மட்டுமே சேகரிக்கும்ஒரு தேனீ ஒரு முறை தேன் தயாரிக்க 50 முதல் 100 பூக்கள் வரை செல்கிறது.இவற்றால் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரை பறக்க முடியும். சராசரியாக மணிக்கு 24 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து செல்லும்.தன்னுடைய இறக்கைகளை ஒரு நிமிடத்துக்கு 11,400 முறை வேகமாக அடிக்கும்.
அதாவது ஒரு வினாடிக்கு 190 முறை அடிக்கும்.மூளை ஓவல் வடிவத்தில் எள் விதையின் அளவில் இருக்கும்.ஒருவித நடன அசைவு மூலம் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக்கொள்கிறது.ஒரு தேன் கூட்டில் ஒரு ராணி தேனீ மற்றும் 20,000 முதல் 60,000 வேலைக்கார தேனீக்கள் இருக்கும். வேலைக்கார தேனீக்கள் 6 வாரம் வரை தேன் சேகரிக்கும். அதன் பின் இறந்து விடுகின்றன.ஆண் தேனீக்கள் 90 நாட்கள் வரை உயிருடன் வாழும்.
ராணி தேனீ 5 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.ராணி தேனீ மட்டுமே முட்டையிடும். ஒரு நாளைக்கு 2500 முட்டைகள் வரை இடுகிறது. வருடத்துக்கு 5 இலட்சம் முதல் 7 இலட்சம் வரை முட்டைகள் இடும். தன் மொத்த வாழ்நாளில் ஏறத்தாழ 1 மில்லியன் முட்டைகள் வரை உருவாக்கும்.ராணித் தேனீக்களுக்கு ஒருமுறை தான் இனவிருத்தி என்பது நடக்கிறது. ஒரு முறை இனவிருத்தி நடந்தவுடன் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை போடுகிறது.ஆண் தேனீக்கள் பிறக்க 24 நாட்களும், வேலைக்காரத் தேனீக்கள் பிறக்க 21 நாட்களும் ஆகின்றன. ஆனால் ராணித் தேனீ முட்டையிலிருந்து முழு வளர்ச்சி அடைந்து பிறக்க 16 நாட்கள் மட்டுமே ஆகின்றன.தேன் குறைப்பாடு வரும் போது ஆண் தேனீக்களை வேலைக்கார தேனீக்கள் விரட்டி விடுகின்றன. மீண்டும் ஆண் தேனீக்கள் தேவைப்பட்டால் ராணி தேனீ உருவாக்கி கொள்ளும்.வேலைக்காரத் தேனீக்களில் பூக்களின் குளுகோஸைத் தேனாக மாற்றக் கூடிய தேன் பை எனும் உள்ளுறுப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பும் மற்ற இரண்டு வகை தேனீக்களுக்கும் இல்லை.கூடுகட்ட பயன்படுத்தும் ஒரு வித மெழுகை உற்பத்தி செய்யும் சுரப்பி (Wax Gland) வேலைக்காரத் தேனீக்களுக்கு மட்டுமே உண்டு. மற்ற தேனீக்களுக்கு இல்லை.ராணி தேனீயால் கூட்டில் இருக்கும் முட்டைகளை ஆண் தேனீயாகவோ வேலைக்கார தேனீயாகவோ மாற்ற முடியும்.ஒரு தேனீ அதிக தேன் இருக்கும் இடத்தை கண்டறிந்தால், அது மீண்டும் கூட்டிற்கு பறந்து வந்து ஒரு நடனத்தை செய்து அதன் நண்பர்களை தேன் இருக்கும் இடத்தில் அழைத்து செல்கிறது. இந்த நடனத்தை ‘வேகல் நடனம்’ (waggle dance)என்று அழைக்கப்படுகிறது.தேனீ 🐝
கருத்துகள்
கருத்துரையிடுக