ஈக்கள் 🪰

 

ஈக்கள்இறக்கைகளை நொடிக்கு 1000 முறைக்கு மேல் அடித்துக் கொள்ளும்.ஒரு மணி நேரத்தில் சுமார் 5. கி.மீ தூரம் பறந்து கடக்கும் திறன் கொண்டது.பிறந்த இடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யுமாம்.கண்களில் சுமார் 4000 லென்ஸ்கள் இருக்குமாம். அதில் நம்முடைய கண்களுக்கு தெரியாத மிக மெல்லிய இரத்த நரம்புகள் இருக்குமாம்.இவற்றால் 360 டிகிரிக்கு பார்க்க முடியுமாம். பின்னல் இருப்பதை கூட பார்க்க முடியுமாம்.



4000 லென்ஸ்களை தனது கூட்டுக் கண்களில் கொண்டிருந்தாலும் அது தனக்குத் தேவையான உணவுகளை தனது நுகரும் தன்மையைக் கொண்டே தேடிக் கண்டுபிடிக்கிறது.திரவ நிலையில் உள்ள உணவுகளை தனது வாயில் உள்ள (ப்ரபோஸிஸ்) ஸ்பான்ஜ் எனும் குழாயை ஒற்றி உறிஞ்சிக் கொள்ளும். இதே திட உணவுகளாக இருந்தால் அவற்றை நேரடியாக வாயில் வைத்து மென்று தின்ன முடியாது.காரணம் ஈக்களுக்கு பற்கள் கிடையாது. அதனால் இந்த திட உணவின் மீது தனது உமிழ் நீரை உமிழ்ந்து அதைக் கரைத்து திரவ நிலைக்கு மாற்றி அதை அப்படி ப்ரபோஸிஸ் (ஸ்பான்ஜ்) போன்ற குழாய் மூலம் உறிஞ்சி நேரடியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடும்.மனிதர்களை போல பகலில் சுறுசுறுப்பாக சுற்றி திரிகின்றன. சூரியன் மறைந்த பிறகு ஓய்வெடுக்கின்றன.ஈக்கள் 🪰

கருத்துகள்