கரப்பான் பூச்சி🪳

 

கரப்பான் பூச்சிஎந்த உணவும் இல்லாமல் மூன்று மாதங்கள் வரை உயிர் வாழும் திறன் கொண்டது.ஒரு ஜோடி பூச்சிகள் ஒரே வருடத்தில் நான்கு லட்சம் பூச்சிகளை பெருக்கமடைய செய்யும்.சாப்பிடும் முன் ஒரு உணவை சிறு சிறு துண்டுகளாக்கிய பின்னரே சாப்பிட ஆரம்பிக்கின்றன.இதன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாததால் அதனுடைய ரத்தம் வெண்ணிறமாக இருக்கும்.ஒரு மீட்டர் தூரத்தை கிட்டத்தட்ட 1 வினாடியில் கடக்கும்.இவற்றால் நாற்பது நிமிடங்கள் வரை சுவாசத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியும்.மேலும் இவற்றால் நீருக்கடியில் 30 நிமிடங்கள் வரை உயிர்வாழ முடியும்.மனிதனைத் தொட்டால் அது பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தன்னைச் சுத்தம் செய்து கொள்ளுமாம்.



உடல் பலபகுதிகளாகப்ப பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன.இதன் தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும்.இதனால் உடலின் ஏனைய பாகங்கள் வழியாகவும் சுவாசிக்க முடியும். அப்படியிருந்தும் ஏன் அதிக காலம் வாழமுடியாது என்றால், அதன் தலையிலேயே வாய் அமைந்துள்ளது. அதனால சாப்பாடு இல்லாமல் இறந்துவிடும். ஆனாலும் அதிக நாட்கள் வயிற்றில் உள்ள உணவை வைத்து மட்டுமே சமாளித்து உயிர் வாழ்கின்றதுபல லென்ஸ் அடங்கிய கண்கள் உள்ளன. அதாவது அவை இரண்டு கண்கள் போல தோற்றமளிக்கும் நிறைய லென்ஸ்களை கொண்டுள்ளன.கரப்பான் பூச்சி🪳

கருத்துகள்