தேள் 🦞

 

தேள்ஒரு வருடம் முழுவதும் உணவு இல்லாமல் வாழ முடியும்.வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் திறன் இவற்றிற்க்கு உண்டு.இவை உணவிலிருந்து பெறும் ஈரப்பதத்தில் மட்டும்தான் உயிர் வாழ்கிறது. ஆக்சிஜனில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே அவை உயிர் வாழத் தேவைப்படுகின்றன.இவற்றிற்க்கு பன்னிரண்டு கண்கள் உண்டு, ஆனால் அவற்றுக்குச் சரியான பார்வைத் திறன் இல்லை.


இவை இரையை அதிர்வு மற்றும் வாசனையை வைத்துதான் கண்டுபிடிக்கும்.எந்த உயிரினத்தை இரையாகப் பிடித்தாலும், அவற்றைத் திரவ வடிவத்தில் மட்டுமே உட்கொள்ள முடியும். அதனால் பிடிக்கிற இரையை நன்கு கொறித்து திரவமாகவே உள்ளே அனுப்புகின்றன.இரையைப் பிடிக்க விஷமுள்ள கொடுக்கை ஒரு முறைப் பயன்படுத்தினால் விஷம் உருவாக ஒரு வாரக் காலம் ஆகும்இது புத்தக நுரையீரலை கொண்டிருப்பதால், அவற்றால் 48 மணி நேரம் நீருக்கு அடியில் மூழ்கி உயிர்வாழ முடியும்.தன்னுடைய முட்டைகளை அதன் உடலுக்குள்ளாகவே வைத்து அடைகாக்கின்றன. குட்டிகள் கருவில் உருவாகி, பிறகு புழுக்களாக உருமாறும் வரை அதன் உடலிலேயே இருக்கின்றன.எல்லா குட்டிகளையும் தன்னுடைய முதுகில் சுமந்து கொண்டு வேறு இடத்துக்கு இடம் பெயரும்.புற ஊதா ஒளியின் கீழ் ஒளிரும் தன்மை கொண்டது.தேள் 🦞

கருத்துகள்