புலிஇதன் உறுமல் 3கிமீ தொலைவிலிருந்தும் கேட்கும்.மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லலாம்.பின்னங்கால்கள் அதன் முன் கால்களை விட நீளமாக இருக்கும், இது ஒரு தாவலில் 20 - 30 அடி முன்னோக்கி பாயும் திறனை அளிக்கிறது.
இதன் உடலில் இருக்கும் கோடுகள் மேல் புறத்தில் உள்ள முடிகளில் மட்டுமல்ல அதன் தோலிலும் இப்படியான வரிக்கோடுகள் இருக்கும்.பூனையின் 95க்கும் அதிகமான டி.என்.ஏ இவற்றிடம் இருக்கிறது.மனிதர்களுக்கு இருக்கும் கை ரேகை போன்று தான் இவற்றின் உடலில் இருக்கும் கோடுகள். ஒவ்வொரு புலிக்கும் இது வேறுபடும்.மனிதர்களுக்கு தெரிவது போன்றே இவற்றிற்க்கு வண்ணங்கள் தெரியும்.பெரும்பாலும் இரவு நேரத்தில் வேட்டையாடுவதையே விரும்பும்.
ஏனென்ன்றால் இரவு நேரத்தில் மனிதர்களை விட 6 மடங்கு பார்வை கூர்மையாய் இருக்கும்.ஒரு நாளில் 27 கிலோ கறியை உணவாக உட்கொள்ளும். பத்தில் ஒரு புலியின் வேட்டை தான் வெற்றியடையும். இதனால் இவற்றால் நீண்ட நாட்கள் உணவு உண்ணாமல் இருக்க முடியும். புலிகளுக்கு ஜீரண சக்தியும் குறைவு என்பதால் ஒரு நாள் எடுத்துக் கொள்ளும் கிலோ கணக்கிலான உணவினை செரிக்க தாமதமாகும்.இவற்றின் எச்சிலே அதற்கு ஆண்ட்டிசெப்டிக் மருந்தாக செயல்படும். காயம்பட்ட இடத்தில் அதனுடைய எச்சிலை வைத்தால் தொற்று ஏற்படாமல் காத்திடும்.புலி
கருத்துகள்
கருத்துரையிடுக