நீர் யானை 

 

நீர் யானைமணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும்.தனது வாயை 90 சென்டி மீட்டர் முதல் 170 சென்டி மீட்டர் நீளம் வரை திறக்கும்.நாளொன்றுக்கு சராசரியாக 60 கிலோ எடையுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடும்.இதன் உதடு பகுதி மட்டும் 50 சென்டி மீட்டர் நீளம் உடையது.


தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் போது அதனுடைய கண்கள் மற்றும் காதுகள் தண்ணீருக்கு வெளியே நீட்டியபடி இருக்கும். மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கும் போது தனது கண்கள் மற்றும் காதுகளில் மூடிக்கொள்ளும்.வியர்வை சுரப்பிகள் கிடையாது. தண்ணீருக்குள் மூழ்கியே இருப்பதால் உடல் வெப்பம் ஏற்படுவதில்லை.


 நீர்யானை உடலின் தோல் பகுதியில் வறண்டுபோகாமல் இருக்க எண்ணெய் பசை போன்ற திரவம் சுரந்து கொண்டே இருக்கும்.வாயில் உள்ள கொம்பு போன்ற முன் பற்கள், அதன் ஆயுள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும். இதன் பற்கள் ஒரு அடி வரை நீளமுள்ளது. இருப்பினும் உணவு சாப்பிடும்போது மேல் தாடையும், கீழ்த்தாடயும் இணைந்து உணவை அரைத்துக் கொண்டே இருக்கும். இதனால் இந்த பல் எந்த அளவுக்கு வளருகிறதோ அந்த அளவுக்கு தேய்ந்து கொண்டே இருக்கும்.நீர் யானை 

கருத்துகள்