வெள்ளரிக்காய்இரவில் இதை அதிகம் சாப்பிடக் கூடாது.இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் சாற்றில் உள்ளது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது.இதில் உள்ள ஸ்டேரோல் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறையச் செய்யும். மேலும் அதிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கிறது.மேலும் தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக நிற்கிறது.உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன. தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துகொள்ள உதவுகிறது.கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாயில் உண்டாகும் கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தை வரவிடாமல் தடுக்கும்.வெள்ளெரிக்காய்
கருத்துகள்
கருத்துரையிடுக