.ஆமை.

 

ஆமைநிலத்தில் வாழும் ஆமைக்கு கால்களில் நகங்கள் அமைந்திருக்கின்றன.தரையில் நடக்கும் வேகம் மணிக்கு சுமார் 70 மீட்டர்.கடலில் வாழும் ஆமை வகைகளின் கால்களே துடுப்பு போன்று அமைந்திருக்கும். கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும்.



பொதுவாக உயிரினங்களில் ஆமைகளுக்கு நீண்ட ஆயுள் உள்ளது. அதன் இதயம் மிகவும் நிதானமாகத் துடிப்பதே அதன் நீண்ட ஆயுளுக்குக் காரணமாக அமைகிறது.கடலில் வாழும் பெண் ஆமைகள், கருத்தரித்ததும், கடற்கரையை நோக்கி கூட்டமாக பயணிக்கத் துவங்கும். கரையை அடைந்ததும் மண்ணில் குழி தோண்டி முட்டைகளை இட்டுவிட்டு சென்றுவிடுகின்றன.கடற்கரையில் முட்டையிட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் செல்லும் ஆமைகள் மீண்டும் 30 ஆண்டுகள் கழித்துகூடத் தான் முட்டையிட்ட இடத்துக்குச் சரியாக வந்து சேரும். 


திரும்பவும் அதே இடத்தில் முட்டைகளை இடும். கடல்நீர் மட்டத்தை விட உயரமாக உள்ள பகுதியைத்தான் முட்டை இடுவதற்கு இவை தேர்வு செய்கின்றன.முட்டைகளைப் பாதுகாக்கவோ, குட்டிகளைப் பார்ப்பதற்கோ பெரிய ஆமை வராது. மணல் சூட்டினால்தான் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியே வருகின்றன. இப்படி முட்டைக்குள் இருந்து குஞ்சுகள் வெளிவர 55 நாட்கள் ஆகும்.நில ஆமைகளின் கண்கள் கீழே எதிரில் உள்ள பொருட்களைப் பார்க்கும் வகையிலும் நீர் ஆமைகள் சிலவற்றின் கண்கள் தலையின் மேற்பக்கத்திற்கு அருகிலும் உள்ளன.கடலாமைகளின் கண்களுக்கு அருகில் கண்ணீர் சுரப்பிகள் உள்ளன. இவை ஆமைகள் குடிக்கும் நீரில் உள்ள மிகையான உப்பினை வெளியேற்ற உதவுகின்றன.இவற்றுக்கு பற்கள் இல்லை எனினும் வலுவான அலகும் தாடைகளும் உண்டு.ஆமை :Tortoise 

கருத்துகள்