தேங்காய்இது இயற்கையிலேயே ஒரு சிறந்த கிருமிநாசினியாக திகழ்கிறது. இதில் இருக்கும் மோனோலாரின் மட்டும் லாரிக் அமிலங்கள் நமது ரத்தத்தில் கலந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு உடலில் பரவி இருக்கின்ற நுண்கிருமிகளை அழித்து, உடலை தூய்மை செய்வதோடு, மேற்கொண்டு புதிய நுண் கிருமிகள் தொற்று ஏற்படாதவாறு காக்கிறது.
இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் எலும்புகளை வலிமைப்படுத்தி எதிர்காலங்களில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படாமல் காக்கிறது. மேலும் பற்களுக்கு பளபளப்பு தன்மையையும் கொடுக்கிறது.நமது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும், முகப்பரு மற்றும் தோல் அரிப்பு பிரச்சனைகளை போக்கவும் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது.தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர துணை புரிகிறது.உடலில் செரிமானத்திற்கு தேவையான என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. கணையத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் உற்பத்தி செய்து உடலுக்கு மிகுதியான சக்தியை கொடுக்கிறது. தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுக்கிறது.
பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படிவதைத் தடுத்து, தொந்தி ஏற்படாமல் காக்கிறது. உடல் நலனை சீராக்குகிறது.தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலில் கீட்டோன் சத்துக்கள் கிடைக்கப்பெற்று, கால் கை வலிப்பு நோய் குறைவதற்கு பெருமளவு உதவுகிறது.தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு இந்த சிறுநீரக தொற்று நோய் படிப்படியாக குறைந்து சிறுநீரகம் மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் அனைத்தும் மீண்டும் பழைய ஆரோக்கியத்தை பெறுவதற்கு உதவுகிறது.அடிக்கடி தேங்காயை மென்று தின்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. ரத்த ஓட்டத்தை சீரான அளவில் வைத்து உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.தேங்காய் காய்கறிகள்
கருத்துகள்
கருத்துரையிடுக