பூண்டுஅளவுக்கு அதிகமாக இதை சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு உள்ளிட்டவைகள் உண்டாகலாம்.இதை அதிகமாக உட்கொள்வதால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.சில நேரங்களில் இது இரைப்பை பாதிப்பையும் ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது வாந்தி,குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும்.
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும்.பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுகிறது.வியர்வையை பெருக்கும்.தாய்பாலை விருத்தி செய்யும்.சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும்.ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும்.இதய அடைப்பை நீக்கும்நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும்ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி, வீரியம் அதிகரிக்கச் செய்யும்.பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றி விடும்.தொண்டை சதையை நீக்கும்.மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப்பிடிப்பை நீக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்து, இதய நோய் வருவது தடுக்கப்படும்.பூண்டு
கருத்துகள்
கருத்துரையிடுக