பச்சோந்தி


 பச்சோந்திபச்சோந்தியின் நாக்கு அதன் உடம்பைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டது.அதிகபட்ச அடர்த்தியான எச்சிலை உமிழும் தன்மை உடையன, மனிதனின் எச்சிலை விட 30 மடஙகு அதிக பிசுபிசுப்பினை கொண்டது.நாக்கு 1 மீட்டர் தூரம் வரை சென்று பூச்சினை பிடிக்கும் திறன் கொண்டவை.அதன் காதுகளால் 200–600 MHz வரை மட்டுமே ஒலியினை கேட்க இயலும். கிட்டத்தட்ட செவிடு என சொல்லலாம்.


தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.அது மட்டுமின்றி தன்னுடைய இரு கண்களையும் 360°க்கு சுழலும் தன்மையையுடையது.பச்சோந்திகள் கட்புலனாகும் ஒளியை மட்டுமன்றி புற ஊதாக்கதிர்களையும் கண்டுணரவல்லது.சில இனங்கள் அவற்றின் மனநிலை, வெப்பம், ஒளி ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்லவை..சில இனங்கள், தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தமது நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தவை.இதற்கு காரணம் அவற்றின் தோலில் உள்ள நிற கலங்களுக்கும், மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்து கொண்டேயிருப்பதாகும்.பச்சோந்தி 

கருத்துகள்