பச்சைபட்டாணி


 பச்சைப் பட்டாணிஉடல் ஒல்லியாய் இருப்பவர்கள், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.



நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப் பட்டாணி.உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் இதில் உள்ள வைட்டமின் ‘சி’ பயன்படுகிறது, வாய் நாற்றமும் அகன்றுவிடுகிறது.வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான உறுப்புகள் நன்கு செயல்படவும் இதில் உள்ள வைட்டமின் ‘பி’ நன்கு பயன்படுகிறது.பட்டாணியில் இருக்கு ஃபைபர் செரிமான பாதையில் உணவை இயக்க செய்கிறது. செரிமானம் சீராக இருக்கவும் நச்சுப்பொருள்கள் அகற்றவும் செய்கிறது.இதில் இருக்கும் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பிற சத்துகள் உங்கள் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும் குணங்களை கொண்டிருக்கிறது.இது ஆரோக்கியமான கண் பார்வைக்கு உதவுகிறது.இது கண்புரை மற்றும் மாஸ்குலர் சிதைவு, பார்வை இழப்பு போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்திலிருந்து குறைக்க செய்யும்.

.மூட்டு வலியை தவிர்க்க செய்கிறது. நாள்பட்ட மூட்டுவலியின் அழற்சியை குறைக்கிறது.பச்சை பட்டாணி வயிற்று புற்றுநோய்க்கு எதிர்த்து செயல்படும். நாள் ஒன்றிக்கு 2 மில்லிகிராம் பட்டாணி சாப்பிட்டால் புற்றுநோயை எதிர்க்க பெரிதும் வழிவகுக்கும்.இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் என்றும் இளமையாக வைக்க உதவும்.பச்சைபட்டாணி 

கருத்துகள்