ஒட்டக சிவிங்கி 


 ஒட்டகச் சிவிங்கிஇவற்றின் பின்னங்கால்களைவிட முன்னங்கால்கள் பத்து சதவிகிதம் நீளமானவை. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்குள்ளும் 15 அடிகள் அடக்கம்ஒரு மணி நேரத்துக்குப் பத்து மைல் தூரத்தை இவற்றால் கடக்க முடியும்.இவற்றிற்க்கு குரல் நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு கத்த முடியாது.தனது நீண்ட கால்களால் மணிக்கு 56 கி.மீ வேகத்தில் ஓடும் ஒட்டகச் சிவிங்கி, நீண்ட தூரம் ஓட வேண்டிய நிலை வந்தாலும், சராசரியாக மணிக்கு 16 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியதுஅடிக்கடி இவை நீர் அருந்துவதில்லை. 



ஒருவாரம் வரைக்கும் நீர் அருந்தாமல் சமாளிக்கக் கூடியவையாக உள்ளன.இவற்றின் வாலில் உள்ள ரோமம் மனிதர்களின் தலைமுடியைவிட 10 மடங்கு அடர்த்தியானது.மணற்புயல் அடித்தால் தன் நாசித்துவாரங்களை மூடிக் கொள்ளும் வசதியும் இவற்றுக்கு உண்டு. அதே போல, எறும்புகள் முகத்தில் மொய்த்தாலும் நாசித் துவாரத்தை மூடிக்கொள்கின்றன.இதன் தோல் ரோமத்தில் குறைந்த பட்சம் 11 வேறுபட்ட மணம் கொண்ட வேதிக் கலவைகள் உள்ளன.இதன் அடி வயிற்றைத் தவிர்த்து மற்ற உடல் பாகங்கள் முழுதும் புள்ளிகள் காணப்படுகின்றன. புள்ளிகளின் அமைப்பு ஒவ்வொரு ஒட்டகச் சிவிங்கிக்கும் தனித்துவமானவை என்பது படைப்பின் வியப்புகளில் ஒன்றே.27 அங்குலத்திற்கு நீண்ட நீல நிற நாக்கினைக் கொண்டவை.



 இந்த நீளம் இலைகளை எளிதாகப் பற்றிக் கொள்ள உதவுகிறது.இவை முதலில் உணவை நன்கு மென்று விழுங்கி விடுகின்றன. அதில் செரிக்காமல் தங்குபவற்றை மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து அசை போடும் ஆற்றல் பெற்றிருக்கின்றன.இவற்றின் சிறப்பம்சமே அதன் கழுத்துதான். இது ஒன்றரை மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை நீண்டு இருக்கும்.இவற்றிற்க்கு நான்கு வயிற்று அறைகள் உண்டு. உணவைச் செரிமானம் செய்ய இந்தக் கூடுதல் வயிற்று அறைகள் உதவுகின்றன.இவற்றின் இதயம் 10 கிலோ கிராம் நிறையுடையது.ஒட்டக சிவிங்கி 

கருத்துகள்