முயல்இவை 3.26 அடி உயரத்தில் குதிக்கின்றன. அதேபோல் 10 அடியில் நீளமாகவும் தாவி தப்பிச் செல்கின்றன.மணிக்கு 40-72 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை!இவற்றின் பற்கள் வளர்ந்துக் கொண்டே இருக்கும். அவை, புற்கள், காட்டுப்பூக்கள் போன்றவை உட்கொள்ளும் போது பற்கள் உடைய நேரிடும்.
எனவே அவற்றுக்கு பற்கள் மீண்டும் முளைக்கிறது.செரிமானத்திற்கு ஹிண்ட்கட் நொதித்தல் உதவுகிறது. எனவே அவை தனது சொந்த மலத்தை மீண்டும் உண்டு செரிமானமடையச் செய்கின்றன. மேலும், அவை போதுமான ஊட்டச்சத்து பெற தனது மலத்தை அவைகளே உண்கின்றன.சுத்தம் பேணுபவை. தனது சொந்த வாயில் உள்ள உமிழ் நீரால் உடலை சுத்தம் செய்துக் கொள்ளும்.
காதுகள் நீளமாக இருப்பதால் நெருங்கி வரும் ஆபத்தை முன்னரே உணர்கின்றன. இரண்டாவதாக அதிக வெப்பதை தணிக்க காதுகளை பயன்படுத்துகின்றன.கண்கள் 360 டிகிரி கோணத்தில் தெரிகிறது. அவற்றின் கண்கள் இரு பக்கமாக இருப்பதால், பார்ப்பது எளிதாக இருக்கும். தலையை திருப்பாமலேயே சுற்றி இருப்பதை அவை அறிந்து கொள்கின்றன. அதேபோல் முயல்களுக்கு முன்பகுதியில் குருட்டு புள்ளியும் உள்ளதுமுயல்
கருத்துகள்
கருத்துரையிடுக