காளான்இதை சுத்தப் படுத்தும் முன்பு அதனை சுத்தப்படுத்தும் நீரில் சிறிது எலுமிச்சை சாறை கலக்கவும். ஏனெனில் இதில் வெளிப்புறத்தில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து விரைவில் கருப்பு நிறமாக மாறிவிடும்.பொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை மூன்று நாட்கள் வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப் படுத்தலாம். ஃப்ரீசரில் வைக்கக் கூடாது.தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் இதை உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.அதேபோல, நன்றாக சமைத்தபிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.சிலருக்கு சரும அலர்ஜி பிரச்சினைகள் இருக்கும், அப்படிப்பட்டவர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.இதில் உள்ள தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் தன்மை கொண்டது.மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.மலச்சிக்கலைத் தீர்க்கிறது.ரத்த சோகை கொண்டவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை குறைபாடு நீங்கும்.சர்க்கரை நோய் உடையவர்கள் காளான் சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு சரியான விகிதத்தில் கட்டுபடுத்தப்படும்.காளான் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாது.உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது.பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது.எர்கோத்தியோனின் எனப்படும் மூலப்பொருள் காளானில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.மார்பக புற்று, பிராஸ்ட்ரேட் புற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், காளானை சாப்பிட்டு வரும் போது அதிலிருக்கும் புற்று செல்களை அளிக்கும் ரசாயனங்கள் மேற்கூறிய புற்று நோயாளிகளின் நோய் பரவும் தன்மையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றுகிறது.காளான் Mushroom 🍄🟫
கருத்துகள்
கருத்துரையிடுக