கங்காருமணிக்கு 56 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.9 மீட்டர் உயரத்தில், இவை குதிக்கலாம்.பல நாட்கள் தொடர்ச்சியாக அவற்றால் நீர் அருந்தாமல் இருக்கமுடியும். இவை நன்றாக நீந்தும் திறன் பெற்றவை.இரண்டு கால்களை காற்றில் உயர்த்திக் குதிக்கும்போது வேகமாக ஓடும். நான்கு கால்களையும் தரையில் வைத்து நடக்கும்போது மெதுவாகவே நடக்கும்.தனது உயரத்தை விட மூன்று மடங்கு உயரம் தாவிக் குதிக்கும் வல்லமை படைத்தது.ஆடு, மாடுகளைப் போல உணவை அசைபோடும் பண்பு கொண்டது. முதலில் வேகவேகமாக உணவை விழுங்கிவிடும்.
பின்னர் மீண்டும் அந்த உணவை ஆசுவாசமாக வயிற்றிலிருந்து வரவழைத்து மெதுவாக மென்று விழுங்கும்.இதன் பற்கள் விசேஷமானவை. பழுதுபட்ட கடைவாய்ப் பற்கள் முழுமையாக உதிர்ந்து, மீண்டும் மீண்டும் வளரும் தகவமைப்பை பெற்றுள்ளன.இதன் வால் தசை வலு கொண்டது, நீளமானது. கங்காரு வேகமாக ஓடிக்கொண்டே திரும்பும்போது விழாமல் சமன்படுத்தும் வேலையை இந்த வால்தான் செய்கிறது.ஏதாவது அபாயச் சூழலை உணர்ந்தால், ஒரு கங்காரு தனது கால்களை பூமியில் வேகமாக அறைந்து மற்ற விலங்குகளை எச்சரிக்கும்.இவற்றின் பையில் வெவ்வேறு கொழுப்பு உள்ளடக்கங்களின் பால் உள்ளது.கங்காரு குட்டிகள் பிறந்த புதிதில் இரண்டு கிராமிற்கும் குறைவான எடையைக் கொண்டுள்ளன. குட்டிகள் தன் தாயின் வயிற்றில் வயிற்றில் வெளிப்புறமாக இருக்கும் பையில் ஒன்பதுமாதங்கள் வரை வளர்கிறது.கங்காரு : kangaaroo
கருத்துகள்
கருத்துரையிடுக