காலிபிளவர்

 

காலிபிளவர்புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது.இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.உடல் சூட்டை குறைக்கும்.மூல நோயை குணமாக்கும்.


ஜீரண சக்தியைத் தரும்.சளியை வெளியேற்றும்.உடல் வறட்சியை சரி செய்யும்.எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது.இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு சிறுநீர் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, சிறுநீரகப் பையில் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.இதில் இருக்கும் சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. அதோடு எதிர்காலங்களில் கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.ஹார்மோன் சுரப்பிகள் சீராக இருக்க ஆன்ட்டி – ஆக்ஸிடென்டுகள் நிறைந்த காலிபிளவர் அதிகம் சாப்பிடுவது அவசியமாகும். குறிப்பாக பெண்களின் உடலில் சுரக்கின்ற ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் சமநிலை இல்லாத தன்மையை சீர் செய்யும் ஆற்றல் காலிபிளவரில் அதிகம் இருக்கின்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் இன்னபிற வேதிப்பொருட்கள் கொண்டிருக்கிறதுகாலிபிளவர் 

கருத்துகள்