முதலைமுதலையால் அதன் நாக்கை அசைக்க முடியாது!இதன் கண்ணிலிருந்து வழியும் நீரானது கண்ணீர் அல்ல. அதன் உடலிலுள்ள அதிகப்படியான உப்பை வெளியேற்றுவதற்காக அதன் உடலிலிள்ள ஒரு சுரப்பி சுரக்கும் திரவமாகும்.
இதன் வாழ்நாள் முழுவதும் பழைய பற்களுக்கு பதில் புதிய பற்கள் முளைத்துக் கொண்டே இருக்கும்!எக்காரணத்தைக் கொண்டும் எந்தச் சூழலிலும் சைவ உணவை உண்ணாது.தனது இரையை மென்று தின்னாமல் முழுமையாக அப்படியே விழுங்கிவிடும்.வயிற்றில் உணவை அரைக்க சிறிய கற்களை விழுங்குகின்றன.
பல மாதங்கள் உணவு இல்லாமல் வாழ முடியும்.மனிதர்களின் விரல் நுனிகளில் இருக்கும் தொடு உணர்வைவிட இதன் வாயிலும் தாடையிலும் இருக்கும் தொடு உணர்வு மிக அதிகமாக இருக்கிறதுதாடையில் ஆயிரக்கணக்கான புலன் உறுப்புகள் (Sense Organs) இருக்கின்றன.முதலைகள் குளிர்ச்சியானவை. அவற்றினால் சொந்த வெப்பத்தை உருவாக்க முடியாது.குளிர்காலங்களில் அவை உறங்குகின்றன. நீண்ட கால வறட்சியின் போது முதலைகள் செயலற்று காணப்படும். உறக்கநிலைக்கு ஒரு இடத்தை உருவாக்க ஆற்றங்கரையின் அல்லது ஏரியின் ஓரத்தில் ஒரு பள்ளம் தோண்டி நீண்ட தூக்கத்தில் ஈடுபடுகின்றது.முதலை
கருத்துகள்
கருத்துரையிடுக