ஒட்டகம்தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்குமணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் தன்மை கொண்டவை.200 கிலோ வரையிலான எடையைச் சுமந்து கொண்டு 50 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கக் கூடியது.பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட தன் மோப்ப சக்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது.
இவற்றின் பால் பசுவின் பாலை விட 10 மடங்கு இரும்பு மற்றும் மூன்று மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது.கொதிக்கும் மணலிலும் 50° செல்சியஸ் வெப்பத்திலும் உணவின்றி, நீரின்றி 8 நாட்கள் வரை இருக்கும். அதன் எடையில் 22% இழந்தபின்னும் உயிர் வாழும் தன்மை கொண்டவை.கடும் குளிர் காலத்தில் உணவின்றி, நீரின்றி ஆறுமாதம் வரை கூட இருக்கும்.மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10 மாதங்களுக்கு தேவையான அளவு சேமித்து கொள்ளும்.
இடையில் நீர் கூட அருந்தாமல் இருக்கக் முடியும்.இவற்றின் உடலில் இருக்கும் திமில்கள் சுமார் 45 கிலோ எடை வரை சேமித்து கொள்ளும். பொதுவாக அது கொழுப்பாக இருக்கும். உணவோ, நீரோ கிடைக்காத சமயங்களில் அதன் திமிலில் உள்ள கொழுப்பினை ஹைட்ரஜனோடு சேர்த்து சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது.மூன்று வயிறுகள் உள்ளன.நீர் அருந்தும்போது ஒரே மூச்சில் 100 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும் குணம் கொண்டது. இவ்வாறு நீரைக் குடித்தவுடன் 10 நிமிடங்களில் அதன் உடலில் தேவையான நீர்ச்சத்து பெற்று விடும்.நீரை அருந்தியவுடன் அதன் இரைப்பையில் உள்ள நீர் அறைகளில் குடித்த நீரைத் தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது. பின் அங்கிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் ஏற்றி சேமித்துக் கொள்கிறது. அப்போது சிவப்பணுக்களின் சவ்வுப்படலமானது 240 % விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டது.இதன் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம்.
அந்த அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் பண்பு கொண்டது. ஆதனால் 1 லிட்டர் நீரை கூட வீணாக்குவதில்லை.இதற்க்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எந்த உயிரினத்திற்கும் கிடையாது. இதன் சிறுநீரில் 40 % அதிகமாக கழிவுகளும், மிக குறைந்த அளவிலான நீரும் இருக்கும். அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது.இவற்றின் உதடுகள் ரப்பர் போன்ற அமைப்பை கொண்டது. இதன் காரணமாக அதனால் குத்தும் முட்களை கொண்ட சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்றவற்றை உண்ண முடிகிறது.ஒட்டகம் 🐫
கருத்துகள்
கருத்துரையிடுக