வௌவால்அதிகபட்சமாக மணிக்கு 100 மைல்கள் வேகத்திற்கு பறக்கின்றன.இதன் உடல் முழுவதும் ரோமத்தால் அடைந்திருக்கும். இதற்கு பறப்பதற்கு தனியாக இறக்கைகள் இல்லாவிட்டாலும் அது அதன் விசித்திரமான தனது கைகள் அமைப்பினை கொண்டு பறக்கிறது.பிராணிகளைப் போலவே கால்களை ஆதராமாகக் கொண்டு இவற்றால் நிற்க முடியாது, அதனால் உள்ளங்கால்களின் உட்பக்க மடிப்புகளின் உதவியைக் கொண்டு மேற்சுவற்றில் தலைகீழாகத் தொங்குகிறது.
தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அதிர்வெண் அளவில் ஒலி அலைகள் உண்டாகின்றன.தன் வாய் வழியாக உண்ட உணவு செறித்த பின், வாய் வழியாகவே கழிவை வெளியேற்றுகிறது.இரைத்தேடப் புறப்படும வவ்வால் மனிதர்கள் கேட்க முடியாத அளவுக்கு மிக மெல்லிய ஓசையை எழுப்புகிறது. இந்த ஓசையால் பீதியடையும் கொசுக்கள், மிகச்சிறிய வண்டுகள், பூச்சிகள் அனைத்தும் இருட்டில் பறக்க தொடங்குகின்றன.அவைகள் பறக்கும் மிக மெல்லிய ஓசையை வவ்வாலின் தனிதன்மை வாய்ந்த செவித்திறமையால் கண்டறிந்து மேலும் தனது சிறப்பான நுகரும் சக்தியின் மூலம் வெகு எளிதில் இரையை பிடித்துவிடுகிறது.இவற்றிற்க்கு கண் உண்டு. இருந்தாலும் அதற்கு கண் பார்வைத்திறன் தேவையில்லை. வௌவால் “சவுண்டு ரேஞ்சிங்” என்ற முறைப்படி இருளில் மோதிக் கொள்ளாமல் தன் விருப்பத்திற்கு ஏற்ப பறந்து செல்கிறது. இதற்கு அல்ட்ரா சவுண்ட் என்ற ஒழி அலைகள் உதவுகின்றன.இவை ஒலியைச் சிறுசிறு துடிப்பலைகளாக வெளிப்படுத்தும். ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது.ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம் ஆகும். 17 மீட்டர் தொலைவில் ஏதாவது தடை இருந்தால், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித்து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர இடைவெளியை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப பறக்கும் திறனைக் கொண்டது வௌவால்.
கருத்துகள்
கருத்துரையிடுக